இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 303.19 ரூபா ஆக அதிகரித்து விற்பனை விலை 318.99 ரூபாவாக உள்ளது.
மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட நடுத்தர மாற்று வீதம் 303.20 ரூபாவாகும் அதேவேளை பெப்ரவரி 24ஆம் திகதி 362.66 ரூபாவாக இருந்தது.