இலங்கையின் பொருளாதார சந்தை இயல்பு நிலைக்கு வருவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கடனை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் கடனை அடிப்படையாக கொண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.அதனால் தான் அனைத்துக்கும் இணக்கமான பொருளாதார கொள்கையை நாம் முன்வைத்துள்ளோம்.
இதில் நாம் குறிப்பாக பார்க்க விரும்புவது கடந்த காலத்தில் நாட்டில் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. ஆனால் இன்று எண்ணெய், மின்சாரம், சமையல் எரிவாயு என அனைத்திற்கும் தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளது.ஆனால் நாட்டில் பணவீக்கம் குறையவில்லை.
ஆகஸ்ட் மாதத்திற்குள் பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்திற்குக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.