Sunday, July 27, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகின்னஸ் சாதனை படைத்த இலங்கை இராணுவ மருத்துவர்கள்

கின்னஸ் சாதனை படைத்த இலங்கை இராணுவ மருத்துவர்கள்

உலகின் மிகப்பெரிய சிறுநீரகக் கல்லை பாரிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு இலங்கை இராணுவம் கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளது.

2023 ஜூன் முதலாம் திகதியன்று கொழும்பு இராணுவ மருத்துவமனையில் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிறுநீரக மருத்துவர், லெப்டினன்ட் கேர்ணல் கே. சுதர்ஷன் தலைமையில் இந்த சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு இராணுவ மருத்துவமனையில் ஜூன் முதலாம் திகதியன்று இராணுவ மருத்துவர்களால் அகற்றப்பட்ட சிறுநீரக்கல் 13.372 செ.மீ நீளமும் 801 கிராம் எடையும் கொண்டது.

தற்போதுள்ள கின்னஸ் உலக சாதனைகளின்படி, உலகில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய சிறுநீரகக் கல் 13 சென்றிமீற்றர், 2004 இல் இந்தியாவிலும், அதிக நிறையான 620 கிராம் சிறுநீரகக்கல் 2008 இல் பாகிஸ்தானிலும் கண்டறியப்பட்டன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles