தாம் நிதியமைச்சராக பதவியேற்கும் போது தமக்கு அதிக அழுத்தங்கள் ஏற்பட்டதாகவும் மக்கள் வீடுகளை சுற்றிவளைக்க ஆரம்பித்த போது தனது குடும்பத்தினர் அச்சமடைந்ததாகவும் அலி சப்ரி எம்.பி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்காலத்தில் எம்.பி ஆக இல்லாவிட்டாலும், நிதியமைச்சர் பதவியை பொறுப்பேற்க ஒருவர் முன்வந்தால், தனது பதவியை தியாகம் செய்ய தயார் என அலி சப்ரி ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.