Monday, November 18, 2024
27.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரை சொகுசு தனியார் பேருந்துகளை சேவையிலிருந்து நீக்கும் தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு

அரை சொகுசு தனியார் பேருந்துகளை சேவையிலிருந்து நீக்கும் தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு

அரை சொகுசு தனியார் பேருந்துகளை சேவையில் இருந்து நீக்குவதற்கு போக்குவரத்து அமைச்சு எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தக் கோரி மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

எந்தவொரு மாற்று வழியையும் தயாரிக்காமல் அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.

அனைத்து மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவை தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளதாகவும், இதற்கு அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களும் தமது ஆதரவை தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு அரை சொகுசு தனியார் பேருந்துகளை இயக்குவதில் இருந்து நீக்க முடிவு எடுக்கப்பட்டது, ஆனால் அதை அப்போது அரசால் செயல்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles