தினேஷ் ஷாப்டர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் அடங்கிய சிம் அட்டையை தனக்கு வழங்க உத்தரவிடுமாறு தினேஷ் ஷாப்டரின் மனைவி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், மரணத்திற்கான காரணம் இதுவரை வெளிப்படுத்தப்படாததால், அவர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் அடங்கிய சிம் அட்டையை வழங்க முடியாது என ஷாப்டரின் மனைவிக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி தகவல் புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய, பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளுக்கு நேற்று (12) அறிவித்துள்ளார்.
அந்த கோரிக்கையை பரிசீலித்த மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.