அத்துருகிரியவில் ஒரு இடத்தில் ராஜபக்ஷக்கள் சட்டவிரோதமான முறையில் 5000 ரூபா தாள்களை அச்சிடுவதாக விசேட வைத்திய நிபுணர் ரணில் ஜயசேன தெரிவித்துள்ளார்.
யூடியூப் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதனை வெளிப்படுத்த முற்பட்ட இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகவும், ராஜபக்ஷக்கள் அந்த பணத்தை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தன்னை கொல்வதற்கு முன்னர் மக்களுக்கு இதை அறிப்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.