ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முதலாவது விமானமான யு330-200 எனும் விமானம் 23 வருட சேவையின் பின் மீண்டும் பிரான்ஸுக்கு திருப்பி வழங்கப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் இந்த விமானத்தை பிரான்சின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கியிருந்தது.
ஏ300 – 200 பிரிவின் கீழ் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் வாங்கிய முதல் விமானம் இதுவாகும்.
இவ்விமானம் 18 வணிக வகுப்பு இருக்கைகள் மற்றும் 251 சாதாரண வகுப்பு இருக்கைகளை கொண்டது.
ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் இந்த விமானத்தை லண்டன் ஹீத்ரோ, ஜேர்மனியின் பிராங்பேர்ட், அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் ரஷ்யாவின் மொஸ்கோ போன்ற நீண்ட தூர பயணங்களுக்கு பயன்படுத்தியுள்ளது.
இதுவரை இந்த விமானம் 100,000 விமான மணிநேரத்தை நிறைவு செய்துள்ளதாக ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விடுதலை புலிகளின் தாக்குதலின் போது, இந்த விமானமும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 6 இலங்கை விமானங்கள் அந்தத் தாக்குதலில் சேதமடைந்த போதும், இந்த விமானம் சேதமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.