இந்த வருடம், கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் ஏற்படுகின்ற பாதிப்பைக் குறைப்பதற்கும் நிலையான நீண்டகாலத் தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவைப் பத்திரமொன்றை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை காணி மீட்புக் கூட்டுத்தாபனத்தினால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
கொழும்பு மாநகரப் பகுதியிலும், கொழும்பிற்கு வெளியே உள்ள பகுதிகளிலும் வெள்ளத்தைத் தணிக்கும் திட்டங்களை இலங்கை காணி மீட்புக் கூட்டுத்தாபனம் அடையாளம் கண்டுள்ளதாகவும் குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த வருடம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2 ஆயிரத்து 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் பல கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.