Friday, July 18, 2025
27.2 C
Colombo
செய்திகள்உலகம்வழிதவறி பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானம்

வழிதவறி பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானம்

இன்டிகோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் குஜராத்தின் ஆமதாபாத் நோக்கி புறப்பட்டது.

இந்த விமானம் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிக்குள் பயணித்த போது, குறித்த பகுதியில் சீரற்ற வானிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் குறித்த விமானம் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து விலகி வழிதவறி பாகிஸ்தான் வான்பகுதிக்குள் நுழைந்தது.

பின்னர் லாகூருக்கு அருகே உள்ள குஜ்ரன்வாலா பகுதிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இரவு 7.30 மணி அளவில் லாகூருக்கு வடக்கே பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்த விமானம் பின்னர் 8.01 மணி அளவில் மீண்டும் இந்திய வான்பகுதிக்குள் நுழைந்தது.

சுமார் அரை மணி நேரம் பாகிஸ்தான் வான்பகுதிக்குள் பயணித்தாலும் எந்தவித அசம்பாவிதமும் இன்றி இந்திய பகுதிக்குள் அது திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

#The times of India

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles