Sunday, July 27, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவடக்கு பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதில் சிக்கல்

வடக்கு பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதில் சிக்கல்

2019/2020 ஆம் ஆண்டில் கல்வியியல் கல்லூரிகளில் 8 ஆயிரம் பேர் உள்ளீர்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம் நியமனம் வழங்கப்படுவதாகவும், வடக்கில் தெரிவு செய்யப்பட்டோரும் அதன்படியே நியமிக்கப்படுவதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அத்துடன், இந்த விடயம் மிக சிக்கலானது எனவும், ஆனாலும் எதுவும் செய்ய முடியாது. எனினும் ஏதாவது மாற்று வழிகளை கண்டறிய முயற்சிக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினா நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. ஸ்ரீதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles