Wednesday, May 20, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலொறி - பேருந்து மோதி விபத்து: 22 பேர் காயம்

லொறி – பேருந்து மோதி விபத்து: 22 பேர் காயம்

கொழும்பு அவிசாவளை வீதியில் ஹங்வெல்ல எம்புல்கம பகுதியில் இன்று (9) காலை லொறி ஒன்றும் இ.போ.ச பேருந்தும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த லொறி ஒன்று அக்கரப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இரண்டு வாகனங்களின் சாரதிகளும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் நவகமுவ மற்றும் ஹோமாகம

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles