முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உத்தியோகபூர்வ இல்லம் ஒன்றை வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்த கருத்து தொடர்பில் நாடாளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்பிய அமைச்சர், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தில் தாம் ஒருபோதும் வசிக்கவில்லை எனவும் அவர் தனது சொந்த வீட்டில் வசிப்பதாகவும் தெரிவித்தார்.
நான் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தைப் பயன்படுத்தியதில்லை. வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் போது மற்றும் ஏனைய விடயங்களுக்காக நான் சில சமயங்களில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் உத்தியோகபூர்வ இல்லத்தையே பயன்படுத்துவேன்.
தமக்கு வழங்கப்பட்ட எந்தவொரு உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தையும் யாருக்கும் வழங்கவில்லை எனவும், அதற்கான அதிகாரமும் தனக்கு இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.