Tuesday, December 23, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு50க்கும் அதிகமான காகங்கள் திடீரென உயிரிழப்பு

50க்கும் அதிகமான காகங்கள் திடீரென உயிரிழப்பு

புத்தளம் நெடுங்குளம் பகுதியில் 50க்கும் அதிகமான காகங்கள் திடீரென உயிரிழந்துள்ள நிலையில், அதற்கான காரணம் இதுவரை தெரியவில்லையென அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் நெடுங்குளம் வீதியின் குடியிருப்புப் பகுதியில் சுமார் 50 ற்கும் அதிகமான காகங்கள் உயிரிழந்துள்ளன.

இதன்போது, அப்பகுதி மக்கள் புத்தளம் பிரதேச மிருக வைத்திய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதிக்கு அதிகாரிகள் வருகைத் தந்து உயிரிழந்த காகங்களை பார்வையிட்டனர்.

குறித்த காகங்கள் உயிரிழந்தமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக உயிரிழந்த காகத்தின் உடற்பாகங்கள் பகுப்பாய்விற்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles