செய்திகள்உள்நாட்டுவெளிநாட்டு தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

வெளிநாட்டு தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்று தருவதாகக் கூறி 2.5 மில்லியன் ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் வென்னப்புவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு எதிராக வென்னப்புவ பொலிஸில் மொத்தம் எட்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, சிலாபத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் வெளிநாட்டு வேலைகளை ஏற்பாடு செய்ய பல்வேறு நபர்களிடமிருந்து அந்த நபர் 2.5 மில்லியன் ரூபாவுக்கு மேல் பணம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

வென்னப்புவ பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles