Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாத்துவ கடலில் சுற்றித்திரியும் இராட்சத முதலை

வாத்துவ கடலில் சுற்றித்திரியும் இராட்சத முதலை

வாத்துவ கடற்கரை பகுதிக்கு அருகில் உள்ள கடலில் சுமார் 12 அடி நீளமுள்ள முதலை ஒன்று சுற்றித்திரிவது நேற்று அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடற்கரையை அண்மித்துள்ள மக்களும், மீனவ மக்களும் சற்று அச்சமடைந்துள்ளதாகவும், மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து விலகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாத்துவ, மொல்லிகொட, தல்பிட்டிய மற்றும் பின்வத்த கடற்கரைகளுக்கு அருகில் முதலைகள் நடமாடுவதை கடற்கரைக்கு அருகில் உள்ளவர்கள் கண்டுள்ளனர்.

இது தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், கடற்கரையில் பாதுகாப்பற்ற முறையில் நடமாடுவதைத் தவிர்க்குமாறும் வாத்துவ பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles