இலங்கையின் முதலாவது ட்ரோன் தொழில்நுட்ப பைலட் பாடநெறியை ஆரம்பித்து வைத்த கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, இலங்கையின் விவசாயத் துறையில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விரைவான அபிவிருத்தி எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் வழிகாட்டலில் விவசாயத் துறை திறன்கள் பேரவை மற்றும் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் தலைமையில் இயங்கி வரும் விவசாய தொழில்நுட்ப விரிவாக்க மையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
பயிற்சி பெற்ற மனித வளப் பற்றாக்குறைக்கு தீர்வாக, நிபுணத்துவ துறையில் உள்ள இடர்ப்பாடுகளைக் கடந்து, வினைத்திறனையும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளையும் வழங்கும் என அமைச்சர் தெரிவித்தார்.