Thursday, July 17, 2025
29 C
Colombo
செய்திகள்விளையாட்டுதொடரை வென்றது இலங்கை அணி

தொடரை வென்றது இலங்கை அணி

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் தொடரை வென்றது இலங்கை அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 22.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதனையடுத்து, பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி, 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றிபெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் பெத்தும் நிஸ்ஸங்க 51 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 56 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்த போட்டியில் சிறப்பாட்டக்காரராக வனிந்து ஹசரங்கவும், தொடரின் சிறந்த வீரராக துஷ்மந்த சாமீரவும் தெரிவாகினர்.

இந்த நிலையில், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை, இலங்கை அணி 2 -1 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles