Thursday, April 23, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநெடுந்தீவு படுகொலை சம்பவம்: சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

நெடுந்தீவு படுகொலை சம்பவம்: சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இடம்பெற்ற 6 பேரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அறுவரின் கொலை தொடர்பான வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது, மூவரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டடார். இந்த வழக்கும் அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி அதிகாலை நெடுந்தீவில் 5 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 101 வயது மூதாட்டியும் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர்களில் 4 பெண்களும் 2 ஆண்களும் அடங்குகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles