Thursday, April 23, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியா – இலங்கை இடையில் மின்சாரப் பரிமாற்ற இணைப்பு

இந்தியா – இலங்கை இடையில் மின்சாரப் பரிமாற்ற இணைப்பு

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மின்சாரப் பரிமாற்ற இணைப்பு 2030ஆம் ஆண்டில் இணைக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (6) தெரிவித்தார்.

பிராந்திய எரிசக்தி ஒருங்கிணைப்பு பற்றி இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக விவாதிக்கப்பட்டு வருவதாகவும், இணைப்பை செயல்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப தேவைகள் மற்றும் வணிக மாதிரிகளை புரிந்து கொள்ள உலக வங்கி இலங்கை மின்சார சபைக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்த அமைச்சர், இது தொடர்பாக உலக வங்கியின் பிராந்திய ஒருங்கிணைப்பு பணிப்பாளர் சிசிலி ஃப்ரீமன் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles