சென்னைக்கும் இலங்கைக்கும் இடையிலான முதல் சர்வதேச பயணக் கப்பலான ‘எம்வி எம்பிரஸ்’ மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் நேற்று முறைப்படி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
சென்னை துறைமுகத்தில் 17.21 கோடி ( இந்திய ரூபா) செலவில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச கப்பல் சுற்றுலா முனையம் திறப்பு விழா நடைபெற்றது.
2,880 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வசதி 3,000 பயணிகளை ஏற்றிச் செல்லும்.
2022 ஆம் ஆண்டு நடைபெறும் இன்க்ரெடிபிள் இந்தியா இன்டர்நேஷனல் க்ரூஸ் மாநாட்டில் உள்நாட்டு மற்றும் சர்வதேச கப்பல் சேவைக்காக சென்னை துறைமுகம் மற்றும் நீர்வழிகள் ஓய்வு சுற்றுலாவுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பின்னணியில் இந்த கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
