ஜனாதிபதியாக பதவியேற்க எவரும் தயாரில்லை என்றால் ஹர்ஷ டி சில்வாவை 6 மாதங்களுக்கு ஜனாதிபதியாக நியமிக்குமாறு ஹரின் பெர்னாண்டோ நேற்று (06) தெரிவித்தார்.
இந்நிலையில், ஹர்ஷ டி சில்வா பொது வேட்பாளரானால் அவருக்கு ஆதரவளிப்பதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (07) நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்பட முன், அந்த கருத்து தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஹர்ஷ டி சில்வாவை ‘இடைக்கால ஜனாதிபதி’ என அழைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நாமல் ராஜபக்ஷவும் அவரை அவ்வாறு அழைத்ததுடன், ஹர்ஷவை இடைக்கால ஜனாதிபதியாக நியமிப்பதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.