ஒரு வருட காலத்துக்கு பாராளுமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தைப் பெறப்போவதில்லை என ஹரின் பெர்ணாண்டோ நேற்று (06) அறிவித்திருந்தார்.
அதன்படி, தமக்கு சம்பளத்தை வழங்க வேண்டாம் என கோரி, நாடாளுமன்ற செயலாளருக்கு அவர் கடிதத்தை கையளித்துள்ளார்.
தம்மை மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டும் என்று அழுத்தம் கொடுக்காவிட்டாலும், இவ்வாறு செய்தால் அதனை வரவேற்பதாகவும் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.