Saturday, June 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை வருகிறது கார்டில்லியா குரூஸ்

இலங்கை வருகிறது கார்டில்லியா குரூஸ்

இலங்கைக்கான இந்தியாவின் முதலாவது சர்வதேச பயணிகள் கப்பலை இன்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால், கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இலங்கைக்கான முதல் சர்வதேச பயணக் கப்பலின் பயணத்தை ஆரம்பிப்பதற்காக அவர் இன்று தமிழகம் வரவுள்ளார்.

மாலை 5 மணியளவில், சர்பானந்தா சோனோவால், சென்னை கப்பல் முனையத்தில் இடம்பெறும் நிகழ்வின்போது, ஒரு நிகழ்ச்சியில் கலந்து கார்டில்லியா குரூஸ், என்ற இலங்கைக்கான முதலாவது சர்வதேச கப்பலை அவர் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வரும்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதனை வரவேற்பார் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, சென்னையின் கிழக்கு கடற்கரையை, கப்பல் சுற்றுலா மையமாக மாற்ற இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சோனோவால் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles