Tuesday, November 19, 2024
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோழி இறைச்சி, மீன் விலைகள் குறையும் வாய்ப்பு

கோழி இறைச்சி, மீன் விலைகள் குறையும் வாய்ப்பு

கோழி இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு தற்காலிகமானது என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கோழி இறைச்சி, மீன், மரக்கறி விலை மிக அதிகமாக இருந்ததுடன், தற்போதும் அந்த நிலையிலேயே உள்ளது.

இந்த நிலை அடுத்த ஓரிரு வாரங்களுக்கும் தொடரலாம் என்று கூறப்படுகிறது.

எவ்வாறெனினும், அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகாரசபை கூறியுள்ளது.

அடுத்த சில வாரங்களில் கோழி இறைச்சியின் விலை குறையும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles