Monday, November 18, 2024
28.3 C
Colombo
செய்திகள்உலகம்ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் வெளியானது

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் வெளியானது

ஒடிசாவில் ஜூன் 2ஆம் திகதி நடந்த ரயில்கள் விபத்திற்கான மூலக் காரணம் என்னவென்பது தெரியவந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்துப் பகுதியில் நடக்கும் சீரமைப்புப் பணிகளை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேற்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘மிக மோசமான இந்த ரயில் விபத்து குறித்த விசாரணை முடிவடைந்தது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விரைவில் அறிக்கையை தாக்கல் செய்வார். விபத்திற்கான காரணம் என்ன? அதில் யாருக்கு பங்கு? என்பதைக் கண்டறிந்துவிட்டோம். எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் பிரச்சினையால் இந்த விபத்து நடந்துள்ளது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் முழுமையான தகவல்கள் வெளியாகும்’ என்றார்.

ரயில்வே தண்டவாளங்கள் சீரமைப்புப் பணியில் 1000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் என்றால் என்ன?

இந்திய ரயில்வேயில் முன்பு ரிலே இன்டர்லாக்கிங் முறை தான் செயல்பாட்டில் இருந்தது. தற்போது எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் (ET) சிக்னல் அமைப்பு செயல்பாட்டில் உள்ளது. இது கணினி வாயிலாக மாற்றத்தக்கது. இந்த நவீன் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே விபத்து நடந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles