Thursday, January 16, 2025
26 C
Colombo
செய்திகள்விளையாட்டுபெட் கம்மின்ஸின் அதிரடியால் கொல்கத்தாவுக்கு வெற்றி!

பெட் கம்மின்ஸின் அதிரடியால் கொல்கத்தாவுக்கு வெற்றி!

15 ஆவது  ஐபிஎல் தொடரின் 14 ஆவது போட்டியில் இன்றைய தினம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

பூனேவில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அதிகபடியாக சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 52 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பெட் கம்மின்ஸ் 49 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில், 162 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

அதிரடியாக துடுப்பாடிய பெட் கம்மின்ஸ் பதினைந்தே பந்துகளில் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களை பெற்றார். இதனூடாக ஐபிஎல் தொடரில் அதிவிரைவு அரைச்சதத்தை பதிவுசெய்த வீரர் என்ற சாதனையையும ்தனதாக்கினார் பெட் கம்மின்ஸ்.

அத்துடன், வெங்கடேஷ் ஐயர் 41 பந்துகளில் ஆட்டமிழப்பு இன்றி 50 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் மும்பை அணியின் முருகன் அஷ்வின் மற்றும் டைமல் மில்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles