Friday, June 6, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமே மாதத்தில் 83,309 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

மே மாதத்தில் 83,309 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

கடந்த மே மாதத்தில் 83,309 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்தாண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 100,000 க்கும் குறைவான வருகையை பதிவு செய்த முதல் மாதமாக மே மாதம் பதிவாகியுள்ளது.

இருப்பினும், மே 2022 இல் பதிவுசெய்யப்பட்ட வருகை புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தின் எண்ணிக்கை 175.5 சதவீதம் அதிகமாகும்.

மே மாதத்தில் பருவ காலம் இல்லாததால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எப்போதும் குறைவாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் வழங்கல் தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 524,486 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles