பிரமிட் மோசடிகளுக்கு அரச ஊழியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்களும் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் நேற்று (01) நடைபெற்ற நாணயக் கொள்கை விளக்க ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரமிட் திட்டங்கள் மற்றும் கிரிப்டோ கரன்சிகள் போன்ற சட்டவிரோத திட்டங்களுக்கு மத்திய வங்கி ஆதரவளிக்காது என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத பிரமிட் திட்டங்களில் ஈடுபடுபவர்கள் அதிக மக்களை பிரமிட் திட்டங்களுக்கு அறிமுகப்படுத்தாமல், பிரமிட் திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களிடம் தாங்கள் பயன்படுத்திய பணத்தைக் கோர வேண்டும் என்றும் ஆளுநர் கூறினார்.