Sunday, November 17, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை 50% ஆக பேணாவிட்டால் அனுமதிப்பத்திரம் ரத்து

குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை 50% ஆக பேணாவிட்டால் அனுமதிப்பத்திரம் ரத்து

50% குறைந்தபட்ச கையிருப்பை பேணாத எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப் பத்திரத்தை இடைநிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் போதுமான அளவு எரிபொருள் உள்ளதால், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என குழப்பமடைய வேண்டாம் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விலை குறையும் என்ற எதிர்ப்பார்ப்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்யாததால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

குறைந்தபட்ச கையிருப்பை 50 வீதமாக பராமரிக்கத் தவறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப் பத்திரத்தை மீள்பரிசீலனை செய்து இடைநிறுத்துமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles