ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டு முன்வைக்கும் எந்த யோசனைக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என ஜேவிபி தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், ஜனாதிபதியை பதவி விலக வேண்டும் என்று முன்னெடுக்கப்படும் போராட்டங்கள், அவர் பதவி விலகாமல் நிறுத்தப்படாது.
அவரால் முன்வைக்கப்படும் எந்த யோசனைகளையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எனவே அவர் பதவி விலகி, அதன்பின்னர் நாட்டில் நிலவும் நெருக்கடி தொடர்பாக எடுக்கப்படுப்படும் ஒன்றிணைந்த முயற்சிகளுக்கு ஒத்துழைப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது உரையை அடுத்து எழுந்த அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ, ஜனாதிபதி பதவி விலக மாட்டார் என்று உறுதிபட அறிவித்தார்.