இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மத்திய வங்கி 1,671 மில்லியன் அமெரிக்க டொலர்களை சந்தையின் ஊடாக கொள்வனவு செய்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
மே மாதத்தில் 662 மில்லியன் டொலர்கள் கொள்வனவு செய்யப்பட்டதாகவும், இது ஒரு மாதத்தின் அதிகபட்ச கொள்வனவு மதிப்பாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.