லங்கா சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மீண்டும் குறைத்துள்ளது. அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 229 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 11 ரூபாவினால் குறைக்கப்பட்டு 114 ரூபாவாக உள்ளன.
மேலும் ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டு 314 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 15 ரூபாவினால் 210 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் வெள்ளை நாட்டரசியின் விலை 4 ரூபாவினால் குறைக்கப்பட்டு 175 ரூபாவாகவும் உள்ளது.