காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த அபுதாபி அரசுக்கு சொந்தமான சரக்கு கப்பலின் பிரதான பொறியியலாளர் கப்பலின் மேல் தளத்தில் இருந்து கடலில் தவறி விழுந்து இன்று (01) அதிகாலை உயிரிழந்ததாக காலி துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கப்பலின் பிரதான பொறியியலாளர் கடலில் விழுந்ததை அடுத்து, கப்பலின் ஊழியர்கள் அவரை மீட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்தார்.
62 வயதான லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் சடலம் தற்போது காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது குறித்து தூதரகத்திற்குத் தகவல் தெரிவித்து பிரேத பரிசோதனையை நடத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மோசமான காலநிலை காரணமாக கடந்த 29 ஆம் திகதி முதல் இந்த கப்பல் காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.