நேற்று நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 15 ரூபாவினால் குறைப்பு , ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிப்பு.
இதன்படி ஒக்டேன் 92 லீற்றர் ஒன்றின் புதிய விலை 318 ரூபா.
95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 385 ரூபா.
லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிப்பு .அதன் புதிய விலை 340 ரூபா.
மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைப்பு .இதன் புதிய விலை 245 ரூபா.
