வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் நேற்று (30) முதல் குருநாகல் போதனா வைத்தியசாலையில் பணியாற்ற ஆரம்பித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான சிங்கள தாய்மார்களுக்கு பிறப்புறுப்பு சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டதாக அபத்தமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பணியிலிருந்து தடை செய்யப்பட்ட வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன், குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் பிரிவுக்கு திரும்பியுள்ளார்.