இந்த வருடத்திற்கான வாக்காளர் பெயர் பட்டியலை வீடுகளுக்கு விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
கிராம சேவையாளர்களுக்கு நிலவும் வெற்றிடம் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலை பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பணிகள் எதிர்வரும் 16 ஆம் திகதியுடன் பூர்த்தி செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.