50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பல்வேறு வகையான போதைப் பொருட்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கிராண்ட்பாஸ், ஹேனமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபரிடம் இருந்து 50 கிராம் 610 மில்லிகிராம் ஹெரோயின், 101 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ், 03 கிலோகிராம் 240 கிராம் கேரளா கஞ்சா மற்றும் 900 மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் விசேட அதிரடிப்படை அத்துருகிரிய முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 67 வயதுடைய பெண் ஆவார்.