2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், பரீட்சை காலத்தில் “சிசு சரிய” பேருந்து சேவையை தொடர்ந்தும் முன்னெடுக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பாடசாலை விடுமுறையுடன் மாணவர் பஸ் சேவையை நிறுத்துவது வழமையாக காணப்படுகின்றது.
எனினும் சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் இக் காலப்பகுதியில் தொடர்ந்தும் குறித்த பஸ் சேவையை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார்.
இதனிடையே சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் பாடசாலைகளில் விசேட டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் நேற்று (28) நடைமுறைப்படுத்தப்பட்டதாகக் கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இன்று முதல் சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமானாலும் உயர்தரப் பரீட்சையின் மதிப்பீட்டுப் பணிகள் தொடர்ந்தும் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.