Sunday, September 14, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிராந்திய வானொலி நிலையங்களை மூடும் அரசின் தீர்மானம் ஒத்திவைப்பு

பிராந்திய வானொலி நிலையங்களை மூடும் அரசின் தீர்மானம் ஒத்திவைப்பு

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள பிராந்திய வானொலி நிலையங்களை இம்மாத இறுதியுடன் மூடுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டிருந்த தீர்மானம் காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

பிராந்திய வானொலி நிலையங்கள் பல , சமூக ,கலை கலாசார விடயங்களுடன் தொடர்புபட்டுள்ளதாலும் ,அவை வருமானத்தை ஈட்டித்தரும் நிலையங்களாக இருப்பதாலும் உடனடியாக மூடாமல் ,அவற்றை மறுசீரமைக்கும் செயற்பாடுகளை ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

கிழக்கு மாகாணத்தில் பிறை எஃப்.எம்., வடக்கின் யாழ் எவ்.எம் உட்பட்ட பல பிராந்திய வானொலி நிலையங்கள் இம்மாத இறுதியுடன் சேவைகளை நிறுத்தவிருந்தமை குறிப்பிடத்தக்கது .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles