Saturday, June 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதினேஷ் ஷாப்டரின் பிரேத பரிசோதனை நிறைவு

தினேஷ் ஷாப்டரின் பிரேத பரிசோதனை நிறைவு

நீதிமன்ற உத்தரவின் பேரில் தோண்டி எடுக்கப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் பிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை நீதிமன்ற வைத்திய பிரிவின் விசேட நீதிமன்ற வைத்தியர் ரொஹான் ருவன்புர மற்றும் ருஹூனு பல்கலைக்கழகத்தின் நீதிமன்ற வைத்திய பிரிவின் பேராசிரியர் விசேட நீதிமன்ற வைத்தியர் யு.சி.ஜி. பெரேரா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

5 மாதங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் மரணமடைந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலம், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள சட்ட வைத்திய சபையின் பரிந்துரையின் பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய வழங்கிய உத்தரவின் பிரகாரம் அண்மையில் தோண்டி எடுக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles