Thursday, July 3, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதினேஷ் ஷாஃப்டரின் தாயாரின் மரபணுவை பெற்றுக் கொள்ள உத்தரவு

தினேஷ் ஷாஃப்டரின் தாயாரின் மரபணுவை பெற்றுக் கொள்ள உத்தரவு

ஜனசக்தி காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷரஃப்டரின் உடலம் தொடர்பான விசாரணைகளுக்கு அவரது தாயாரின் மரபணு (DNA) கோரப்பட்டுள்ளது.

தாயாரின் இரத்த மாதிரிகளை அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கைகளை கோருமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று (26) உத்தரவிட்டுள்ளார்.

அவரது தாயார் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் ரத்த மாதிரிகளை பெற்றுக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலம் தொடர்பான இரண்டாவது பிரேத பரிசோதனை நேற்று (26) கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.

நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவப் பேராசிரியர் அசேல மெண்டிஸ் தலைமையிலான ஐவர் அடங்கிய நிபுணர் குழுவினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles