எரிவாயு கொள்கலன் விற்பனை தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.
சந்தையில் எரிவாயு கொள்கலன்கள் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் வந்துள்ளன.
குறித்த கொள்கலன்களின் விலைகளை வாடிக்கையாளர்கள் பார்வையிடும் வகையில் பிரசுரிக்குமாறு எரிவாயு விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு எரிவாயு கொள்கலன்கள் விற்கப்பட வேண்டும் என்பதுடன், போலியான எரிவாயு பற்றாக்குறையை ஏற்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்படுகிறது.