தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட முகவரி வழங்குவது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஆராய்ந்து வருவதாக சட்டமா அதிபர் இன்று உயர்நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளி ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான விசாரணைகள் இன்று உயர்நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் கனிஸ்கா டி சில்வா இதனைத் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.