சிறுவர்களை யாசகம் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுத்துவதை கட்டுப்படுத்தும் நோக்கில் யாழில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தல் மற்றும் சிறுவர் வியாபாரத்தை கட்டுப்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், பதிவு செய்யப்படாத விடுதிகளை கண்காணித்து சட்டநடவடிக்கையெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், பாடசாலை மாணவர்களின் ஒழுக்கநெறிகள் மற்றும் 21 வயது குறைந்தவர்களுக்கு சிகரெட் மற்றும் போதைப் பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் பொது இடங்களில் நிகழும் சமூக சீர்கேடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.