செய்திகள்உள்நாட்டுரயில் மோதி இரு இளைஞர்கள் பலி

ரயில் மோதி இரு இளைஞர்கள் பலி

வதுருவ ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (25) அதிகாலை 5.45 மணியளவில் கைப்பேசியில் பேசிக் கொண்டு ரயில் கடவையை கடந்த இளைஞர்கள் இருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.

வெயங்கொட வதுருவ பிரதேசத்தை சேர்ந்த கவிஷ்க லக்மால் என்ற 18 வயது இளைஞனும், எஸ்.ஏ.திவங்க என்ற 19 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த இரு இளைஞர்களின் வீடுகளும் ரயில் பாதைக்கு அருகில் அமைந்துள்ளதாகவும், சுற்றுலாப்பயணம் செல்வதற்காக இன்று காலை வதுருவ ரயில் நிலையத்தை நோக்கி அவர்கள் செல்லும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்கள் வேயங்கொட ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles