Wednesday, July 16, 2025
27.8 C
Colombo
செய்திகள்உலகம்உலகின் மிக பெரிய பணக்காரரான பெர்னார்டின் சொத்து மதிப்பு சரிந்தது

உலகின் மிக பெரிய பணக்காரரான பெர்னார்டின் சொத்து மதிப்பு சரிந்தது

உலகின் மிக பெரிய பணக்காரராக கருதப்படும் பெர்னார்ட் அர்னால்டின் சொத்து ஒரே நாளில் 11.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க பொருளாதாரம் நலிவடைந்ததால் ஆடம்பரப் பொருட்களின் தேவை குறையும் என்ற கருத்து உருவாகியதால், LVMH நிறுவனப் பங்குகளின் மதிப்பு வீழ்ச்சியால் அவரது சொத்து மதிப்பு ஒரே நாளில் 11.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைந்துள்ளது.

LVMH இன் பங்குகளின் மதிப்பு 5 சதவிகிதம் சரிந்துள்ளது. அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரு வருடத்தில் வீழ்ச்சியடைந்த அதிகபட்ச சதவீதமாகும்.

அவரது சொத்து 11.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைந்ததையடுத்து, அவரது புதிய சொத்து மதிப்பு 191.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles