Sunday, May 31, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹெரோயினுடன் இராணுவ சிப்பாய் கைது

ஹெரோயினுடன் இராணுவ சிப்பாய் கைது

களுத்துறையில் ஹெரோயினுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்குருவத்தோட்ட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது களுத்துறை ஹொரணை வீதியில் கெசல்ஹேனாவ சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட போது, ​​அவரிடம் இருந்து 5 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தின் இராணுவ உபகரணப் படைப்பிரிவில் கடமையாற்றிய இவர், 2012ஆம் ஆண்டு விடுமுறையில் கடமையிலிருந்து விலகியிருந்தார்.

சந்தேகநபர் 31 வயதுடைய ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்தவர். சந்தேகநபர் இன்று ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles