Saturday, May 30, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசம்பந்தன் - செந்தில் - ஜீவன் சந்திப்பு

சம்பந்தன் – செந்தில் – ஜீவன் சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் நேற்று (24) சந்திப்பொன்று இடம்பெற்றது.

கொழும்பிலுள்ள இரா. சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தோட்ட உட்கட்டமைப்பு, நீர்வழங்கல் வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதன்போது, கிழக்கு மாகாணத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்திகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles