Saturday, July 26, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனக்க ரத்நாயக்க பதவி நீக்கம்: பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

ஜனக்க ரத்நாயக்க பதவி நீக்கம்: பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் 46 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே ஜனக்க ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யும் பிரேரணை இன்று விவாதிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, குறித்த பிரேரணை தொடர்பான விவாதம் இடம்பெற்ற நிலையில், மாலை 5 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles